சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் ஐபோன்கள்…!! உடனே அப்டேட் செய்யுமாறு ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு…!!
தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு என்றாலே பலருக்கும் ஆப்பிள் சாதனங்கள் தான் நினைவிற்கு வரும். ஏனென்றால் அவ்வளவு எளிதாக யாராலும் ஆப்பிள் தயாரிப்பான ஐபோன் மற்றும் ஆப்பிள் கணினிகளை ஹேக் செய்ய முடியாது. அதனால் தான் பலரும் ஆப்பிள் கருவிகளைப் அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ஆப்பிள் தரப்பில் இருந்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கனடாவின் 24 வது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்பு…!! டிரம்புடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல்..
அதாவது, “அமெரிக்காவின் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தனது பயனாளர்களின் ஐபோன்களையும் ஐபேடுகளையும் உடனடியாக அப்டேட் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும், பல்வேறு ஆப்பிள் இயங்கு தளங்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், iPadOS, macOS, Vision OS மற்றும் Safari இன் பழைய வேர்ஷன்களில் இயங்கும் சாதனங்கள் எளிதாக சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதால் பயனாளர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது”.


























