அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்…7% டிஏ உயர்வு என அதிரடி தகவல்
ஜம்மு காஷ்மீரில் 6 வது ஓய்வூதிய குழுவின் கீழ் வரும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7% டிஏ உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இந்த 7% டிஏ உயர்வானது கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து கணக்கிடப்படும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, ஜம்மு காஷ்மீர் அரசு ஊழியர்களுக்கு கடந்த 8 மாத டிஏ நிலுவை தொகையானது இந்த மார்ச் மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
WPL 2025: DC vs MI இறுதிப் போட்டியில் வெல்லப்போவது யார்..? WPL-ல் புதிய சாதனை படைக்குமா டெல்லி கேப்பிடல்ஸ்..
இதனால், ஜம்மு காஷ்மீர் அரசு ஊழியர்களின் டிஏ வானது 239% லிருந்து 246% ஆக உயரும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாநில அரசின் அறிவிப்பால், மத்திய அரசு ஊழியர்களும் இதுபோன்ற அறிவிப்புகள் தங்களுக்கு எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பொதுவாக, மத்திய அரசு ஆண்டுதோறும் ஹோலி பண்டிகைக்கு முன்னரே டிஏ உயர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிடும். ஆனால், தற்போது வரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


























