
உங்கள் முதலீட்டை 3 மடங்கு உயர்த்தி தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்… உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற சரியான திட்டம் இதுவே..!!
ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளுக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்து தருவதற்காக பல்வேறு நிதி சார்ந்த திட்டமிடல்களை செய்து வருகின்றனர். இதில் சிலர் குழந்தையின் பெயரில் பொது வருங்கால வைப்புநிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா போன்ற திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இந்நிலையில் தங்களது குழந்தையின் எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்ய விரும்பவர்களுக்கான ஒரு சிறப்பு முதலீடு திட்டம் பற்றி இப்பதிவில் காண்போம்.
அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்…7% டிஏ உயர்வு என அதிரடி தகவல்
அதாவது, உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க பெரிய தொகையை முதலீடு செய்ய விரும்பினால், அதை போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். மேலும், போஸ்ட் ஆபிஸின் 5 வருட பிக்சட் டெபாசிட் திட்டம் உங்களது நிரந்தர வைப்பு நிதிக்கு 7.5 சதவீத வட்டி வழங்குகிறது. இத்திட்டத்தில் நீங்கள் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வின் போது வட்டியுடன் ரூ.7,24,974 ஆக கிடைக்கும். இதுவே 10 ஆண்டுகள் தொடர்ந்து செய்துவர வட்டி மட்டுமே ரூ.5,51,175 சம்பாதிப்பீர்கள். இதை தொடர்ந்து, உங்களது நிரந்தர வைப்பு நிதியை தலா 5 ஆண்டுகளுக்கு இரண்டு முறை நிர்ணயிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் தொகை மொத்தம் 15 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப்படும். இறுதியாக, 15 வது ஆண்டின் முதிர்வில், நீங்கள் முதலீடு செய்த 5 லட்ச ரூபாயின் வட்டியில் இருந்து மட்டும் ரூ. 10,24,149 சம்பாதிப்பீர்கள். மேலும், நீங்கள் முதலீடு செய்த 5 லட்சத்துடன் வட்டி 10,24,149 ரூபாயையும் இணைப்பதன் மூலம், மொத்த தொகையாக ரூ.15,24,149 உங்களுக்கு கிடைக்கும்.

























