தமிழகத்தில் இனி TET தேர்வு நடைபெறுமா..? நடைபெறதா…? சற்று முன் வெளியான முக்கிய தகவல்..!!

0
??????????? ??? TET ?????? ?????????..? ????????...? ????? ???? ??????? ??????? ?????..!!
தமிழகத்தில் இனி TET தேர்வு நடைபெறுமா..? நடைபெறதா...? சற்று முன் வெளியான முக்கிய தகவல்..!!

தமிழகத்தில் இனி TET தேர்வு நடைபெறுமா..? நடைபெறதா…? சற்று முன் வெளியான முக்கிய தகவல்..!!

ஆசிரியர்கள் அனைவரும் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் தேர்வு என்றால் அது TET தேர்வு தான். அதாவது, தமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் தகுதித்தேர்வாக TNTET தேர்வு உள்ளது. இத்தேர்வானது, 2012 ஆம் ஆண்டு கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் இது தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான TRBயின் ஆண்டு அட்டவணையில் TET தேர்வு குறித்த எவ்வித அறிவிப்பும் இல்லாதது, தேர்வர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. மேலும் இத்தேர்வு நடைபெறுமா..? நடைபெறதா..? என்பது குறித்து கீழே விரிவாக காண்போம்.

புதிதாக சொத்து வாங்க போறீங்களா..?? பதிவு கட்டணத்தில் சலுகை பெற இதை செய்யுங்கள்..!!

அதாவது, கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் இத்தேர்வுக்கென வகுக்கப்பட்ட அடிப்படை விதிகளின் படி, TET தேர்வானது ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட வேண்டும் என சட்டம் கூறுகிறது. ஆனால், இத்தேர்வானது அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை 13 முறை மட்டுமே நடந்துள்ளது. அதிலும் 2012-ல் மட்டுமே ஆண்டுக்கு 2 முறை இத்தேர்வு நடந்துள்ளது. மேலும், தாள் 1 மற்றும் தாள் 2 என நடைபெறும் இந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முடியும். அந்தவகையில், கடந்த 2 வருடங்களாக நடைபெறாத இத்தேர்வு இந்தாண்டாவது நடைபெறுமா என காத்திருந்த 5 இலட்சத்திற்கு மேற்பட்ட தேர்வர்களுக்கு TRBயின் ஆண்டு அட்டவணையும், அரசின் நேரடி பணி நியமன ஆணையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், TET தேர்வை நடத்தக்கோரி அரசுக்கு அழுத்தமும், எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது. எனவே, விரைவில் தேர்வு குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!