திடீரென குறைக்கப்பட்ட ரெப்போ வட்டி விகிதம்.. ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
ரெப்போ ரேட் என்பது வணிக வங்கிகளுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும் போது ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் வட்டி விகிதமாகும். மேலும், இரு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பான முடிவுகள் எடுப்பது வழக்கம். அந்த வகையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான நிதிக் கொள்கைக் குழு ஆலோசனையின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 5ம் தேதி நடைபெற்றது. அதில் வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.25% ஆக நிர்ணயிக்கப்பட்டது.
தமிழகத்தில் இனி TET தேர்வு நடைபெறுமா..? நடைபெறதா…? சற்று முன் வெளியான முக்கிய தகவல்..!!
இந்நிலையில் “இந்த ரெப்போ வட்டி விகிதத்தை 6.25% இருந்து 6% ஆக குறைத்திருப்பதாக RBI ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று (09-04-2025) நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் அறிவித்துள்ளார். மேலும், கடந்த 2 மாதத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.50% குறைத்துள்ள ரிசர்வ் வங்கி அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் 4 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது”. இதனால் வீட்டுக் கடன்கள், கார் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் மீதான எதிர்பாராத கட்டணங்களை தடுக்க முடியும் என கூறப்படுகிறது.
























