Whatsappல் வந்த புது அப்டேட்.. இனி மொபைல் நம்பர் தேவை இல்லை – பயனர்கள் ஹாப்பி!
வாட்ஸ்ஆப் நிறுவனம் சில வாரங்களுக்கு முன் ஈமெயில் வெரிஃபிகேஷன் முறையை அமல்படுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது IOS யூசர்களுக்கு இந்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
வாட்ஸ்ஆப் அப்டேட்
மக்கள் பலர்பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கிறது. இந்தியாவில் சுமார் 535 மில்லியன் பயனாளிகள் வாட்ஸ்ஆப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் வாட்ஸ்ஆப்பில் மொபைல் எண் மூலமாக வெரிஃபிகேஷன் செய்யப்பட்டது. தற்போது ஈமெயில் மூலம் வெரிஃபிகேஷன் செய்யும் முறையை அமல்படுத்த இருப்பதாக சில வாரங்களுக்கு முன் வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்தது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் – சவரன் ரூ.45,840க்கு விற்பனை!!
அதாவது பீட்டா வெர்ஷனில் மட்டும் இருந்த இம்முறையை இப்போது உலகளவில் iOS வெர்ஷன் யூசர்களுக்கு புதிய அப்டேட்டில் (இந்த ஈமெயில் வெரிஃபிகேஷனை) அறிமுகப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலமா இனிமேல் மொபைல் நம்பர் இல்லாமல் ஈ-மெயில் வெரிஃபிகேஷன் செய்து வாட்சப் அக்கவுண்ட்டை பயன்படுத்தலாம்.