WhatsApp செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் – இது நல்லா இருக்கே!
உலக அளவில் அதிக மக்கள் பயன்படுத்தி வரும் WhatsApp செயலியில் அடிக்கடி பயனர்களின் வசதிக்காக புதிய அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தகவல் பரிமாற்ற செயலியாக தொடங்கிய WhatsApp தற்போது பல வகையான டிஜிட்டல் சேவைகளையும் செய்து வருகிறது. கடந்த 2020இல் வாட்ஸ்அப் நிறுவனம் செயலியின் மூலம் பணம் அனுப்பும் சேவை இந்தியாவில் தொடங்கியது. இதனால் நாம் சாட் செய்யும் போது பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும்.
ரயில் டிக்கெட் புக் பண்ண போறீங்களா? சீக்கிரம் புக் செய்வது எப்படி?
இந்த புதிய வசதியின் உதவியுடன், பயனர்கள் குடும்பம், நண்பர்கள், வேலை போன்ற பல்வேறு குழுக்களுக்கு ஏற்ப சாட்களை List செய்ய முடியும். உங்கள் குடும்ப சாட்களை விரைவாக அணுக விரும்பினால், ‘குடும்பம்’ என்று பெயரிடப்பட்ட ஒரு பட்டியலை உருவாக்கலாம். அதேபோல், ‘வேலை’ மற்றும் ‘நண்பர்கள்’ போன்ற தனித்தனி பட்டியல்களை உருவாக்குவதன் மூலம் முக்கியமான சாட்களை விரைவாகக் கண்டறியலாம். சாட்ஸ் டேபிற்கு சென்று, மேலே உள்ள + ஐகானை தட்டி புதிய பட்டியலை உருவாக்க முடியும்.


























