ஆடம்பர பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் – அதிரடி அறிவிப்பு!

0

ஆடம்பர பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் – அதிரடி அறிவிப்பு!

இந்திய அரசாங்கம் இப்போது அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரியைக் கடுமையாக்கி உள்ளது. ஏப்ரல் 22 முதல், மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ரூ.10 லட்சத்திற்கு மேல் விலையுள்ள ஆடம்பர பொருட்களுக்கு 1% வரி (TCS) விதிக்கப்படும். கைக்கடிகாரங்கள், கைப்பைகள், கலைப்பொருட்கள், ஹோம் தியேட்டர், படகுகள், பந்தய குதிரைகள் ஆகியவற்றுக்கு இந்த வரி பொருந்தும். ஏப்ரல் 22 தேதியிட்ட அறிவிப்பில், வருமான வரித்துறை ரூ.10 லட்சத்திற்கு மேல் விலையுள்ள ஆடம்பரப் பொருட்களின் விற்பனையில் TCS வரி விதிக்க புதிய விதிகளை அறிவித்துள்ளது.

கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் இவ்வளவு லாபமா? நல்லா இருக்கே!

அதில் அளிக்கப்பட்டுள்ள பட்டியலின்படி, கைக்கடிகாரம், பழங்காலப் பொருட்கள், ஓவியம், சிற்பம் போன்ற கலைப்படைப்புகள், நாணயம், முத்திரைத் தாள் போன்ற சேகரிப்பு பொருட்கள்; படகுகள்; கேனோ, ஹெலிகாப்டர், சன் கிளாஸ், ஹேண்ட் பேக், பர்ஸ் போன்ற பை வகைகள், காலணிகள்; கோல்ஃப் கிட், ஸ்கை-வேர் போன்ற விளையாட்டு உடைகள் மற்றும் உபகரணங்கள், ஹோம் தியேட்டர் அமைப்பு; பந்தய கிளப்புகள், பந்தயக் குதிரை ஆகியவற்றை ரூ.10 லட்சத்துக்கு மேல் விலை கொடுத்து வாங்கும் போது 1% TCS வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!