
யூடியூப்பர்களுக்கு எச்சரிக்கை – இதை செய்யாதீங்க! மீறினால் வழக்கு பதிவு! மத்திய அரசின் அதிரடி முடிவு!
இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் உதவியால் செய்தி பரிமாற்றம் என்பது மிகவும் எளிதாகி விட்டது. இந்த நேரத்தில் போலியான தகவல்கள் பரவுவதும் அதிகமாகி விட்டது. இதனை தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
யூடியூப் சேனல்:
இந்தியாவில் தகவல் பரிமாற்றத்தில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் ஒரு புறம் நன்மை இருந்தாலும் மற்றொரு பக்கம் சில நபர்கள் தவறான தகவல்களை பரப்பி மக்களை குழப்பத்திற்கு உள்ளாகின்றனர். கடந்த வருடத்தில் பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் வைரஸ் தொற்று குறித்தும் தடுப்பூசிகள் குறித்தும் வாட்ஸ் ஆப் வாயிலாக போலி தகவல்கள் பரவியது. இதனை கல்வியறிவு இல்லாத மக்கள் நம்பி ஏமாற்றம் அடைகின்றனர். மேலும் சிலர் தவறான முடிவுகளையும் எடுக்கின்றனர்.
TCS ஊழியர்களுக்கு ஷாக் நியுஸ் .. முடிவுக்கு வரும் WFH – இல்லையேல் வேலைக்கு ஆப்பு!
வாட்ஸ் ஆப்பை தொடர்ந்து யூடியூப் சேனல்கள் வாயிலாகவும் இது போன்ற தவறான தகவல்கள் பரவி வருகிறது. தற்போது யூடியூப் வாயிலாக வருமானம் ஈட்ட முடியும் என்ற எண்ணத்தில் அனைவரும் யூடியூப்டில் கணக்கு தொடங்கி பல வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் ஒரு தரப்பினர் தங்களது திறமைகளையும்,மக்களுக்கு அன்றாட வாழ்வில் தேவையான தகவல்களையும் பதிவிட்டு வருகின்றனர். சிலர் அரசுக்கு எதிரான சட்ட ஒழுங்கை சீர் குலைக்கும் சர்சையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இதனால் நாட்டில் பதற்றமான சூழல் உருவாகிறது. மேலும் தேவையற்ற வன்முறைகளும் அரங்கேறுகிறது. இதனை தடுக்க மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் முதல் 100-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களை முடக்கியது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பும் யூடியூப் சேனல்களை ரத்து செய்து அவர்களின் மீது குற்றப்பிரிவு வழக்கு தொடர மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்