மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – விழுப்புரத்தில் நாளை நடைபெறுகிறது!!

0
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - விழுப்புரத்தில் நாளை நடைபெறுகிறது!!
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - விழுப்புரத்தில் நாளை நடைபெறுகிறது!!மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - விழுப்புரத்தில் நாளை நடைபெறுகிறது!!
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – விழுப்புரத்தில் நாளை நடைபெறுகிறது!!

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் வேலைவாய்ப்பு பிரிவு மற்றும் விழுப்புரம் மண்டல மையம் உறுப்பு சமுதாய கல்லூரி இணைந்து நடத்தும் இந்த முகாமில் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன.

தனியார் வேலைவாய்ப்பு முகாம்:

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் வேலைவாய்ப்பு பிரிவு மற்றும் விழுப்புரம் மண்டல மையம் உறுப்பு சமுதாய கல்லூரி இணைந்து விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சிறிய அளவில் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் காலாண்டிற்கு ஒரு நாள் பெரிய அளவில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – தமிழக அரசு அறிவிப்பு!!

இந்த முகாமில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு, ஐஐடி படிப்புகள் வரை உள்ள வேலைவாய்ப்பற்றவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விழுப்புரம் மாவட்டம் வேலைவாய்ப்பு மையாயத்தில் பல்வேறு தகுதிகள் கொண்ட 1,46,136 பெண்கள் உட்பட 2,89,329 பேர் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். கடந்த மாதம் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் மூலம் 5,490 பேர் பணி நியமனம் பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – ஒரு வகுப்பறையில் 10 மாணவர்க்கு மட்டுமே அனுமதி!!

இந்நிலையில் பிப்ரவரி 5 (நாளை) நடைபெறும் இந்த முகாமில் 60க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயகுறிப்பு ஆகியவற்றுடன் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் முகாமில் கலந்து கொள்ளலாம்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – வினாத்தாள் தயாரிப்பு பணிகள் தொடக்கம்!!

இந்த முகாமில் கலந்துகொள்ளும் நிறுவனங்கள், வேலையாட்கள் குறித்த விவரங்களை அறிய www.tnprivatejobs.tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பி தெரிந்து கொள்ளலாம் அல்லது விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவகத்தை நேரிலோ அல்லது 04146- 226417 தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!