இந்த வாரம் மக்களின் மனம் கவர்ந்த டாப் 5 சீரியல்கள் – வெளியான TRP பட்டியல்!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி மற்றும் சன் டிவி இடையே ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இந்த வாரம் டிஆர்பியில் முதலிடம் பிடித்த சீரியல் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
டிஆர்பி பட்டியல்
சின்னத்திரையில் விஜய் டிவி மற்றும் சன் டிவி இடையே ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 44 வது வார டிஆர்பி பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் சன் டிவி எதிர்நீச்சல் சீரியல் 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் 8.1 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் 8.0 புள்ளிகளுடன் பிடித்துள்ளது.
வாட்ஸ்அப் மூலமாகவும் இனி பணம் சம்பாதிக்கலாம் – சூப்பர் அப்டேட்!!
நான்காவது இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் வானத்தை போல சீரியல் 7.6 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. ஐந்தாவது இடத்தை சிங்கப்பெண்ணே சீரியல் மற்றும் ஆஹா கல்யாணம் சீரியல் 7.4 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. ஆறாவது இடத்தை கயல் சீரியல் 7.3 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. ஏழாவது இடத்தை இனியா சீரியல் 7 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. எட்டாவது இடத்தை சுந்தரி சீரியல் 6.5 புள்ளிகளுடனும், ஒன்பதாவது இடத்தை மகாநதி சீரியல் 5.9 புள்ளிகளுடனும், பத்தாவது இடத்தை மோதலும் காதலும் சீரியல் 5.2 புள்ளிகளுடன் பிடித்துள்ளது.