தீபாவளி முதல் EMI உயரும் – வங்கியின் புதிய வட்டி விகிதம் அமல்!!
தீபாவளி பண்டிகையில் இருந்து கனரா வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு EMI தொகை உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
EMI உயரும்:
தீபாவளி பண்டிகையையிட்டு HDFC நிறுவனம் MCLR (மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் பேஸ்டு லெண்டிங் ரேட்) விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால், வீட்டுக் கடன், தனிநபர் கடன் மற்றும் வாகனக் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கான EMI தொகையும் உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து, தற்போது கனரா வங்கியும் MCLR விகிதத்தை 5 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இந்த வாரம் மக்களின் மனம் கவர்ந்த டாப் 5 சீரியல்கள் – வெளியான TRP பட்டியல்!
தற்போது கனரா வங்கியில் MCLR விகிதம் 8.70 சதவீதமாக இருக்கும் நிலையில் 8.75 சதவீதமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய விகிதம் தீபாவளி பண்டிகை முதல் அமலுக்கு வரவுள்ளது. இதனால், வாடிக்கையாளர்களுக்கான EMI தொகை கணிசமாக உயரும். இந்த புதிய வரி விகிதம் 1 வருடம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.