தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிரடி உத்தரவு – தெற்கு ரயில்வே எச்சரிக்கை!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் ரயில்களில் பட்டாசு எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவு
தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் தீபாவளி பண்டிகையை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் தீபாவளிக்கு ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் மக்கள் ஜவுளி கடைகளிலும் பட்டாசு கடைகளுக்கும் படையெடுத்து வருகின்றனர். ஒரு சிலர் நாளை முதல் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுவார்கள்.
தீபாவளி முதல் EMI உயரும் – வங்கியின் புதிய வட்டி விகிதம் அமல்!!
இந்நிலையில் தீபாவளிக்கு ரயில்களில் சொந்த ஊருக்கு செல்வோருக்கு முக்கிய உத்தரவு ஒன்றை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதாவது ரயில்களில் பயணம் செய்யும் போது பட்டாசு எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் ஏற்படும் தீ விபத்துகளை தவிர்க்கவே இந்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.