இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – மாதம் ரூ.160000/- சம்பளம்!
ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) ஆசியாவின் முதன்மையான ஏரோநாட்டிக்கல் வளாகமாகும். இங்கு காலியாக உள்ள Senior Medical Officer (Physician) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.12.2023 க்குள் இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் |
பணியின் பெயர் | Senior Medical Officer (Physician) |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
HAL காலிப்பணியிடங்கள்:
Senior Medical Officer (Physician) பதவிக்கு 1 பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து MBBS முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். மருத்துவ கவுன்சில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
30.09.2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
HAL சம்பள விவரம்:
தேர்வு செய்யப்படும் ஊழியருக்கு அதிகபட்சமாக மாதம் ஒன்றுக்கு ரூ.50000 – 160000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
SECI நிறுவனத்தில் ரூ.2,80,000/- மாத சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
தேர்வு செயல் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் 15.12.2023 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.