
கண்ணனை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்த கதிர்.. மூர்த்தி என்ன சொல்வார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ப்ரோமோ!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தற்போது ஒரு புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் வாழ தெரியாமல் வாழ்ந்து பல லட்சம் கடனில் மாட்டிக் கொள்கிறார். அவருக்கு உதவி செய்ய சென்ற கதிர் பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார். ஆனால் கதிரை மூர்த்தியும், ஜீவாவும் சேர்ந்து வெளியே கொண்டு வருகின்றனர். வெளியே வந்த கதிர் மீண்டும் கண்ணனை தேடி செல்கிறார். வாங்குகிற சம்பளத்தில் கடன் அடைத்தால் எப்படி வாழ முடியும் என கேட்டு மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
அப்பத்தாவை தீர்த்து கட்டி ஜனனி மீது பழியை போட்ட குணசேகரன் – எதிர்நீச்சல் சீரியல் அப்டேட்!
தனத்தை அழைத்து இனிமேல் கண்ணனும் ஐஸ்வர்யாவும் இங்கே தான் இருப்பார்கள் என சொல்ல, உடனே தனம் அண்ணன் என்ன நினைப்பார் என கேட்கிறார். உடனே கதிர் எல்லாம் அப்பறம் பேசிக் கொள்ளலாம் என சொல்ல, முல்லைக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. இந்நிலையில் மூர்த்தி கடையில் இருந்து வர, கண்ணன் ஐஸ்வர்யா வந்த விஷயம் தெரிந்து என்ன சொல்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download