
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் முக்கிய நட்சத்திரம்? காரணம் இதுவா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் குழந்தை நட்சத்திரமாக களமிறங்கி பலருடைய மனதை கவர்ந்த கயல் பாப்பா சீரியலை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக 3 ஆண்டுகளாக கலக்கி வரும் கயல் பாப்பாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றன. இந்த குழந்தை பிறந்தது முதல் இந்த சீரியலில் நடித்து வருகிறது. சீரியலில் பல கதாபாத்திரங்கள் மாறினாலும், கயல் பாப்பா தன் நடிப்பு திறமையால் இன்னும் மாற்றப்படாமல் இருக்கிறார். மேலும் மறைந்த நடிகை விஜே சித்ரா முதல் இப்போது உள்ள நடிகர்கள் வரை கயல் பாப்பாவை மிகவும் விரும்பி வைத்துக் கொள்வார்களாம்
NCDC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
இந்நிலையில் கயல் பாப்பாவின் அம்மா கொடுத்த பேட்டியில் கயல் பாப்பாவின் நிஜ பெயர் ஹாசினி எனவும், தொடக்கம் முதல் நல்ல ஒத்துழைத்து நடிப்பதால் அவரை மாற்றவில்லை என தெரிவித்துள்ளார். முதலில் பிறந்த குழந்தையை நடிக்க அனுப்ப குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஆனால் இப்போது எல்லாருக்கும் கயலை பிடித்துவிட்டதாக சொல்கிறார். மேலும் கயல் பாப்பா பள்ளி செல்ல இருப்பதால் அவர் சீரியலை விட்டு விலக போறார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு கயல் பாப்பாவின் அம்மா ஸ்கூல் சேர்ந்தாலும் தொடர்ந்து சீரியலில் நடிப்பார் என தெரிவித்துள்ளார்.
Join Our WhatsApp
Group” for Latest Updates