
கோலாகலமாக தொடங்கும் கண்ணம்மா அக்கா திருமணம்.. காதலை சொல்வாரா என காத்திருக்கும் பாரதி – சீரியல் ப்ரோமோ!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மாவின் அக்கா திருமணத்திற்கு பாரதி வராமல் இருக்க, அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணம்மாவின் அக்கா திருமண ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க மறுபக்கம், பாரதி தனது காதலை சொல்லிவிட்டு கண்ணம்மாவின் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். தனது அக்கா கல்யாணத்தில் பாரதி வருவார் என கண்ணம்மா எதிர்பார்க்க, கண்ணம்மா தன்னை காதலிப்பதாக சொன்னால் தான் நான் வருவேன் என பாரதி பிடிவாதமாக இருக்கிறார். மறுபக்கம் கல்யாணத்திற்கு மூர்த்தி சமையல் செய்ய வருகிறார்.
இந்நிலையில் கண்ணம்மா தண்ணீர் வேண்டும் என சமையலறை செல்ல, அங்கே மூர்த்தி சமைத்து கொண்டிருக்கிறார். ஆனால் கண்ணம்மா அவரை கவனிக்காமல் இருக்க, இனி வரும் எபிசோடில் கண்ணம்மாவை மூர்த்தி பார்த்து விடுகிறார். இது கண்ணம்மா இல்லை சித்ரா என்ற உண்மையை மூர்த்தி சொல்லி விடுவாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது