ஈஸ்வரி & கோபியை வெளியே துரத்தும் பாக்கியா.. இனி நடக்க போவது என்ன? “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவிற்கு தொழில் நஷ்டத்தில் இருக்க, இதில் கோபி பிரச்சனை வேற அதிகமாக இருக்கிறது. அதனால் பாக்கியா என்ன முடிவு செய்வார் என்பது பரபரப்பாக உள்ளது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியாவின் அனைத்து தொழில்களும் நஷ்டத்தில் இருக்க, அவருக்கு மசாலா பிசினஸ் தான் கை கொடுக்கிறது. ஆனால் கோபி மசாலா பிசினஸ் செய்ய கூடாது என தடை போடுகிறார். அதற்கு ஈஸ்வரியும் துணையாக இருக்க, பாக்கியாவிற்கு பயங்கர கோவம் வருகிறது. இந்நிலையில் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற பாக்கியா அதிரடி முடிவு ஒன்றை எடுக்கிறார்.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு திடீர் பணியிட மாற்றம் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
அதாவது அவர் கோபி இனிமேல் இந்த வீட்டில் இருக்க கூடாது என சொல்ல, ஈஸ்வரி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் ஈஸ்வரியும் இனிமேல் இந்த வீட்டில் இருக்க கூடாது என பாக்கியா சொல்கிறார். இதை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைய இனி நடக்க போவது என்ன என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.