இனியாவிடம் மறைமுகமாக திருமணம் பற்றி சொன்ன கோபி, கோவப்பட்ட ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
இனியாவிடம் மறைமுகமாக திருமணம் பற்றி சொன்ன கோபி, கோவப்பட்ட ஈஸ்வரி - இன்றைய
இனியாவிடம் மறைமுகமாக திருமணம் பற்றி சொன்ன கோபி, கோவப்பட்ட ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியாவிடம் கோபி ராதிகாவை திருமணம் செய்ய இருப்பது குறித்து மறைமுகமாக சொல்கிறார். அது புரியாமல் இனியா எப்போதும் உங்களுடன் இருப்பேன் என சொல்கிறார். பின் கோபி இனியாவிற்கு புது ட்ரெஸ் வாங்கி கொடுக்க, ஈஸ்வரி இதெல்லாம் தெரிந்து கோபப்படுகிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் எழில் ப்ரொடியூசரிடம் என்னால் செய்ய முடிந்தால் நான் செய்திருப்பேன் ஆனால் என்னால் முடியாது என்னை மன்னித்துவிடுங்கள் என சொல்ல, உடனே ப்ரொடியூசர் எப்போ சூட்டிங் போறீங்க என கேட்கிறார். உடனே எழில் நீங்க சொல்வது எனக்கு புரியவில்லை என சொல்ல, ப்ரொடியூசர் எப்போது சூட்டிங் போறீங்க ஹீரோவை எப்போது வர சொல்ல என கேட்க அடுத்த மாதம் முதல் சூட்டிங் தொடங்க இருப்பதாக சொல்கிறார். உடனே ப்ரொடியூசர் என் மகளுக்கு உங்க மீது ரொம்ப நம்பிக்கை என்னிடம் பேசி என்னை கெஞ்ச வைத்திருக்கிறாள் என சொல்ல,எழில் நன்றி சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

மறுபக்கம் கோபி இனியாவிடம் பேசுகிறார். உனக்கு இப்போது போல என்னைக்கும் பிடிக்குமா என கேட்க, எனக்கு எப்போதும் உங்களை பிடிக்கும் என இனியா சொல்கிறார். பின் ராதிகா ஆன்டியை பற்றி என்ன நினைக்கிறாய் என கோபி கேட்க அவங்களை பற்றி நான் எதற்கு நினைக்க வேண்டும் என இனியா கேட்கிறார். வீட்டில் எல்லாரும் பேசுவாங்க அதனால் ராதிகாவை நீ தவறாக நினைக்க வேண்டாம் என கோபி சொல்ல, இனியாவிற்கு கோபி சொல்வது புரியாமல் இருக்கிறது. பின் இனியாவிடம் கோபி உனக்கு உன் அம்மாவை பிடிக்காது அவளுக்கும் உனக்கும் சரியாக வராது, டாடி அவளுடன் பல விஷயம் சகித்து கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பேன்.

நீங்க இல்லை என்றால் என்னால் அவளுடன் வாழவே முடியாது என சொல்ல, இனியா அதெல்லாம் எதற்குவிடுங்க என சொல்கிறார். நான் அவளுடன் வாழ தான் நினைத்தேன் ஆனால் என்னை வெளியே அனுப்ப யார் காரணம் என கேட்கிறார். ஆனால் உன்னை மட்டும் நான் விட்டு கொடுக்கமாட்டேன் என கோபி சொல்கிறார். உன்னை நான் நன்றாக பார்த்துக் கொள்வேன் என கோபி சொல்ல, இனியாவிடம் ராதிகாவை கல்யாணம் செய்து கொள்ள போவதை சொல்ல முடியாமல் கோபி இருக்கிறார். பின் இனியாவிற்கு வாங்கி வைத்திருந்த புது ட்ரெஸ் கொடுக்க இனியா அதை பார்த்து சந்தோசப்படுகிறார்.

பின் கோபி இனியாவை கொண்டு வந்து இறக்கி விட பாக்கியா வருத்தத்துடன் பார்க்கிறார். இனியா கையில் பை இருப்பதை பார்த்து இப்போது எதற்கு ட்ரெஸ் வாங்கி கொடுத்து இருக்கிறார் என நினைக்கிறார். பின் இனியா கோபியிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார். கோபி பாக்கியாவை பார்த்து ரொம்ப நிம்மதியாக இருக்க போல சீக்கிரம் உனக்கு நல்ல செய்தி வரும் என சொல்கிறார். மறுபக்கம் எழில் வேலை செய்து கொண்டிருக்க வர்ஷினி வந்து இன்னும் வீட்டிற்கு போகவில்லையா என கேட்கிறார். அப்போது அமிர்தா போன் செய்ய என்ன காதலா என வர்ஷினி கேட்கிறார். ஆமாம் என சொல்லிவிட்டு எழில் அமிர்தாவிடம் ப்ரொடியூசர் சொன்னதை சொல்கிறார்.

பொதுத்துறை வங்கிகளில் “இம்முறையில்” பணியமர்த்துதல் திட்டம்? மத்திய அரசின் முக்கிய அறிவுறுத்தல்!

பின் வர்ஷினி ட்ரைவர் வேண்டாம் என சொல்லிவிட்டு எழிலை இறக்கிவிட சொல்கிறார். மறுபக்கம் பாக்கியா ஈஸ்வரியை சாப்பிட சொல்ல, ஈஸ்வரி நானே எப்போ போகலாம் என இருப்பதாக சொல்கிறார். தாத்தா யார் மீது உள்ள கோவத்தை யார் மீது காட்டுகிறாய் என கேட்கிறார். அப்போது செழியன் வர ஈஸ்வரி அப்பா போன் செய்தானா என கேட்கிறார். பின் ஜெனி இனியாவை கூட்டிக் கொண்டு வர, நேரத்திற்கு சாப்பிட மாட்டியா என ஈஸ்வரி கேட்கிறார். ஹோம் ஒர்க் இருந்ததாக இனியா சொல்ல, ஜெனி அவள் பொய் சொல்கிறாள் ரூமில் புது ட்ரெஸ் போட்டு பார்த்தால் என ஜெனி சொல்கிறார். ஈஸ்வரி யார் வாங்கி கொடுத்தது என கேட்க, டாடி வாங்கி கொடுத்தார், இன்னைக்கு ஸ்கூல் விட்டு கூட்டிக் கொண்டு வந்து ராதிகா வீட்டிற்கு போய்விட்டு எனக்கு புது ட்ரெஸ் வாங்கி கொடுத்தார் என இனியா சொல்ல பாக்கியா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். ஈஸ்வரிக்கு பயங்கர கோவம் வர, இங்கே என்ன நடக்கிறது என உனக்கு புரிகிறதா என கேட்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!