தமிழகத்தில் உச்சத்தை தொட்ட காய்கறிகளின் விலை – இன்றைய விலைப்பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் பருவமழையின் காரணமாக காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்துவிட்டது. இந்நிலையில், இன்றைய விலைப்பட்டியல் முழுவதும் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
காய்கறிகளின் விலை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் போதுமான காய்கறிகளின் விளைச்சல் இல்லாமல் காய்கறிகள் அனைத்தும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் ஒவ்வொரு காய்கறியும் எவ்வாறு விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்கிற விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதாவது, பெரிய வெங்காயம் கிலோவுக்கு ரூ. 30க்கும், சின்ன வெங்காயம் கிலோவுக்கு ரூ. 60க்கும், பச்சை மிளகாய் கிலோவுக்கு ரூ.35க்கும், நெல்லிக்காய் கிலோவுக்கு ரூ.89க்கும், பீட்ரூட் கிலோவுக்கு ரூ. 30க்கும், உருளைக்கிழங்கு கிலோவுக்கு ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு விருது – எகிறும் எதிர்பார்ப்பு!
அடுத்ததாக, குடைமிளகாய் கிலோவுக்கு ரூ.25க்கும், சுரைக்காய் கிலோவுக்கு ரூ. 20க்கும், பாகற்காய் கிலோவுக்கு ரூ.20க்கும், அவரைக்காய் கிலோவுக்கு ரூ.75க்கும், முட்டைக்கோஸ் கிலோவுக்கு ரூ.10க்கும், கேரட் கிலோவுக்கு ரூ. 35க்கும், கொத்தவரை கிலோவுக்கு ரூ. 25க்கும், பட்டர் பீன்ஸ் கிலோவுக்கு ரூ. 90க்கும் வெள்ளரிக்காய் கிலோவுக்கு ரூ. 20க்கும், முருங்கைக்காய் கிலோவுக்கு ரூ.20க்கும், பெரிய கத்திரிக்காய் கிலோவுக்கு ரூ. 50க்கும், பச்சை கத்திரிக்காய் கிலோவுக்கு ரூ.30க்கும், பீன்ஸ் கிலோவுக்கு ரூ.70க்கும், வெண்டைக்காய் கிலோவுக்கு ரூ. 30க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.