தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு விருது – எகிறும் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் சிறந்த ஊழியர்களுக்கான விருது வழங்கும் விழா குறித்த எதிர்பார்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளது.
விருது வழங்கும் விழா:
தமிழகத்தில் இருக்கும் ரேஷன் கடைகள் அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடையும் ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறது. இதில் ரேஷன் கடை ஊழியர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு உலக உணவு தினத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கான விருது வழங்கும் திட்டத்தை அரசு தொடங்கியது. ஆனால் உலக உணவு தினமான அக்டோபர் 16ம் தேதி அன்று விருதுகள் வழங்கப்படாமல் பிப்ரவரி 2023 இல் தான் விருதுகள் வழங்கப்பட்டது.
ரூ.1,000 உரிமைத்தொகை திட்டத்திற்கான புதிய இணையதளம் – விண்ணப்பத்தின் நிலை அறிய ஏற்பாடு!
இந்நிலையில் வரும் அக்டோபர் 16ம் தேதி அன்று உலக உணவு தினத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கான விருதுகளை வழங்கும் விழா நடத்தப்படுமா என்பது குறித்த எதிர்பார்ப்புகள் ரேஷன் கடை ஊழியர்களிடம் அதிகரித்து உள்ளது. ரேஷன் கடைகளுக்கு வரும் மக்களிடம் கனிவுடன் நடப்பது, சிறப்பாக பணி புரிவது போன்ற பிரிவுகளின் கீழ் சிறந்த ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படுகிறது.
இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இதற்கான பணிகள் எதுவும் துவங்கப்படாமல் உள்ளது ரேஷன் கடை ஊழியர்களின் மத்தியில் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.