ரூ.1,000 உரிமைத்தொகை திட்டத்திற்கான புதிய இணையதளம் – விண்ணப்பத்தின் நிலை அறிய ஏற்பாடு!
தமிழகத்தில் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் விண்ணப்ப நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
புதிய இணையதளம்:
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்கான பணிகள் கடந்த ஜூலை மாதம் முதல் தொடங்கப்பட்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தேர்வு செய்யப்பட்ட ஒரு கோடியே 6,50,000 பெண்களுக்கு ரூபாய் 1000 உரிமைத் தொகை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. 56.60 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து செப்டம்பர் 18ஆம் தேதி முதல் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் வாயிலாக காரணம் அனுப்பி வைக்கப்படும் என்று அரசு தெரிவித்தது.
தமிழகத்தில் யார் யாருக்கெல்லாம் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்? – சுற்றறிக்கை வெளியீடு!
இருப்பினும் தற்போது வரை உரிமை தொகையும் கிடைக்காமல், குறுஞ்செய்தியும் வராமல் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக தமிழக அரசு www.kmut.tn.gov.in என்ற புதிய இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளது. இந்த இணையதளத்தில் குடும்ப அட்டை எண்ணை பதிவிட்டு தங்களின் விண்ணப்ப நிலையை பெண்கள் தெரிந்து கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.