தமிழகத்தில் நீடிக்கும் கனமழை எச்சரிக்கை – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் நீடிக்கும் கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் நீடிக்கும் கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் நீடிக்கும் கனமழை எச்சரிக்கை – வானிலை அறிக்கை!

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கன மழைக்கான எச்சரிக்கை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும் வட தமிழகத்திலும் மழை பெய்துள்ளது. ஈரோடு மற்றும் நாமக்கல்லில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நேற்று பதிவாகியுள்ளது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உச்சத்தை தொட்ட காய்கறிகளின் விலை – இன்றைய விலைப்பட்டியல் வெளியீடு!

மேலும் செப்டம்பர் 20 முதல் 25ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் குமரி கடல், வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 65 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால் இன்று மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் வங்கக்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளிலும் குறிப்பிட்ட இடங்களுக்கு மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!