
மீண்டும் சவுதி அரேபியாவில் நடக்கும் போர் நிறுத்த பேச்சுவார்த்தை.. ரஷ்யா எடுக்கவிருக்கும் முடிவு என்ன..?
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, டொனால்ட் டிரம்ப் சந்தித்தார். அப்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் “நாங்கள் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால், ரஷ்யா- உக்ரைன் இடையான போரை மிக விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவோம்” என்று டிரம்ப் உறுதியளித்தார். அதன்படி போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாடுகளிடையே பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம் குறித்து மற்றொரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, போர் நிறுத்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க, உக்ரைன் மற்றும் ரஷ்யா அதிகாரிகள் இடையே சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் போது எரிசக்தி அமைப்புகள், மற்றும் முக்கிய கட்டமைப்புகளை பாதுகாப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக அமெரிக்க குழுவுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ரஷ்யா மற்றும் உக்ரைன் அரசாங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக “சவுதி அரேபியாவில் ரஷ்ய குழுவினருடன் அமெரிக்க தரப்பினர் இன்று (24-03-2025) பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையின் மூலம் உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம் சில வாரங்களில் அமலாக வாய்ப்புள்ளதாக, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்”.























