
“LIC யின் புதிய ஸ்மார்ட் ஓய்வூதிய திட்டம்”…!! ரூ. 12,000 வரை லாபத்தை அள்ளி கொடுக்கும் சூப்பர் திட்டம் இதோ
இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) ஆனது பல்வேறு ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், நடப்பாண்டில் இருந்து புதிதாக “ஸ்மார்ட் ஓய்வூதிய திட்டத்தை” தொடங்க உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது, இத்திட்டத்தில் பயனாளர்கள் ஒருமுறை பணத்தை டெபாசிட் செய்தாலே போதும் மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர ஓய்வூதியத்தை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் பெறலாம். அதன்படி, மாதத்திற்கு ரூ. 1,000 அல்லது 3 மாதங்களுக்கு ரூ. 3,000 அல்லது 6 மாதங்களுக்கு ரூ. 6,000 அல்லது வருடத்திற்கு ரூ. 12,000 வரை ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
மேலும், LIC யின் இந்த புதிய திட்டத்தில் 18 முதல் 100 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். மேலும், இதில் இரண்டு வகையான ஓய்வூதிய திட்டங்கள் உள்ளன. அதாவது, முதலாவதாக “ஒற்றை ஆயுள் வருடாந்திரம்”, இதில் பயனாளர் இறக்கும் வரை ஓய்வூதியம் பெறலாம். இரண்டாவதாக, “கூட்டு ஆயுள் வருடாந்திரம்”, இதில் பாலிசிதாரருடன் சேர்ந்து அவரது மனைவியும் ஓய்வூதியம் பெறுகிறார். மேலும், இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் LIC யின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலோ அல்லது நேரடியாக அருகிலுள்ள அலுவலகங்களுக்கோ சென்று முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
























