UPSC வேலைவாய்ப்பு 2023 – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்!
UPSC என்னும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Scientist – B, Assistant Engineer, Specialist Grade III, போன்ற பல்வேறு பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 15.06.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Union Public Service Commission (UPSC) |
பணியின் பெயர் | Scientist – B, Assistant Engineer, Specialist Grade III, Junior Ship Surveyor – cum – Assistant Director General, Junior Research Officer |
பணியிடங்கள் | 20 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.06.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
UPSC காலிப்பணியிடங்கள்:
UPSC ஆணையத்தில் Scientist – B, Assistant Engineer, Specialist Grade III, Junior Ship Surveyor – cum – Assistant Director General, Junior Research Officer ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
UPSC பணிக்கான கல்வி தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree, MBBS, Post Graduate Degree, Post Graduate Diploma, Doctorate Degree ஆகிய டிகிரிகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.
CONCOR மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.2,60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
UPSC பணிக்கான அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் 01 ஆண்டு முதல் 03 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
UPSC பணிக்கான வயது வரம்பு:
Scientist – B பணிக்கு 40 வயது என்றும்,
Assistant Engineer பணிக்கு 30 / 35 வயது என்றும்,
Specialist Grade III பணிக்கு 40 வயது என்றும்,
Junior Ship Surveyor – cum – Assistant Director General பணிக்கு 40 வயது என்றும்,
Junior Research Officer பணிக்கு 30 வயது என்றும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
UPSC பணிக்கான ஊதியம்:
இந்த UPSC சார்ந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு Pay Matrix Level – 07, 08, 10, 11 என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் வழங்கப்படும்.
UPSC பணிக்கான தேர்வு முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.
UPSC பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
இந்த UPSC சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 27.05.2023 அன்று முதல் 15.06.2023 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.