உலகளவில் 42வது நாடாக Flix நெட்வொர்க்கில் இணைந்த இந்தியா – அதிகரிக்கும் வேலைவாய்ப்பு!

0
உலகளவில் 42வது நாடாக Flix நெட்வொர்க்கில் இணைந்த இந்தியா - அதிகரிக்கும் வேலைவாய்ப்பு!
உலகளவில் 42வது நாடாக Flix நெட்வொர்க்கில் இணைந்த இந்தியா - அதிகரிக்கும் வேலைவாய்ப்பு!
உலகளவில் 42வது நாடாக Flix நெட்வொர்க்கில் இணைந்த இந்தியா – அதிகரிக்கும் வேலைவாய்ப்பு!

உலகளாவிய மொபிலிட்டி நிறுவனத்தில் Flix, இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய இருக்கிறது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

இந்தியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க பல நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் உலகளாவிய மொபிலிட்டி வழங்குநரான Flix இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு முதல் தனது நிறுவனத்தின் செயல்பாடுகளை தொடங்குவது குறித்த திட்டத்தை வெளியிட்டு இருக்கிறது. இதற்காக உள்ளூர் குழுவை நிறுவி அதன் நிர்வாக இயக்குநராக சூர்யா குரானாவை நியமித்துள்ளது. Flix நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் இந்தியாவில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தபால் அலுவலகத்தில் மாதம் ரூ.50,000 வரை வருமானம் -வந்தாச்சு சூப்பர் அறிவிப்பு!

இது குறித்து Flix இன் இணை நிறுவனர் மற்றும் CEO கூறுகையில் Flix ஒரு வளர்ச்சி நிறுவனம் மற்றும் உலகளவில் இது விரிவடைந்து இருக்கிறது. மேலும் அந்த நிறுவனத்தின் உலகளவில் 42வது நாடாக Flix நெட்வொர்க்கில் இந்தியா இணைந்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளது. Flix நிறுவனம் நவீன பேருந்துகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் பயணிகளின் வசதி மற்றும் வசதிக்காக கவனம் செலுத்துகிறது. FlixBus பேருந்துகள் இலவச Wi-Fi, ஏர் கண்டிஷனிங், கூடுதல் லெக்ரூம், பவர் சாக்கெட்டுகள் மற்றும் உயர் தரமான தூய்மை மற்றும் பாதுகாப்பைப் பராமரித்தல் போன்ற வசதிகளுடன் நவீன வசதிகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!