UPSC IES ISS 2023 தேர்வர்களுக்கான அறிவிப்பு – நேர்காணல் தேதி வெளியீடு!
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது IES / ISS 2023 தேர்வின் இரண்டாம் கட்டமான நேர்காணலுக்கான அழைப்பு கடிதம் மற்றும் தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.
UPSC IES ISS 2023 நேர்காணல்:
இந்திய பொருளாதாரம் சேவை மற்றும் இந்திய புள்ளியியல் சேவை நிறுவனங்களில் Junior Time Scale பிரிவின் கீழ்வரும் Group B பதவிகளுக்கு தகுதியான நபர்கள் UPSC ஆணையத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் IES / ISS 2023 தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த வகையில் 2023ம் ஆண்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 51 பணியிடங்களுக்கான அறிவிப்பானது 19.04.2023 அன்று வெளியிடப்பட்டு முதல் நிலையான எழுத்து தேர்வானது 23.06.2023 முதல் 25.06.2023 அன்று வரை நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவுகளும் 24.08.2023 அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் UPSC ஆணையத்தால் 17.11.2023 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் UPSC IES / ISS 2023 தேர்வின் இரண்டாம் நிலையான நேர்காணல் குறித்து கூறப்பட்டுள்ளது.
TNUSRB SI (Taluk, AR & TSP) & Station Officer திருத்தப்பட்ட தேர்வு மதிப்பெண்கள் 2023 – வெளியீடு!
UPSC IES / ISS 2023-ன் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 85 நபர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு கடிதம் https://www.upsc.gov.in மற்றும் https://www.upsconline.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் இன்று முதல் 18.12.2023 அன்று வரை பெற்றுக்கொள்ளலாம். இந்த நேர்காணல் ஆனது 18.12.2023 அன்று தொடங்கப்பட்டு 21.12.2023 அன்று வரை காலை, மாலை என இரண்டு சுற்றுகளாக நடைபெறவுள்ளது. தேர்வர்கள் தங்களுக்கான நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் நேர்காணலுக்கான நேரத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள Interview Schedule மூலம் எளிமையாக அறிந்து கொள்ளலாம்.