மாட்டுத் தொழுவத்தில் உறங்கினால் புற்றுநோய் குணமாகும்.. இணையத்தில் வைரலாகும் அமைச்சரின் கருத்து!!
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சஞ்சய் கங்வார், கரும்பு வளர்ச்சி மற்றும் சர்க்கரை ஆலைகள் துறை (பாஜக) அமைச்சராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று (அக்டோபர் 13) உத்தரப் பிரதேசம் மாநிலம் பிலிபித் மாவட்டம் பகாடியா நௌகவான் பகுதியில் பசு காப்பகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் பேசிய கருத்து சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
சுங்க வரியை ரத்து செய்தது அரசு..!! ” வாகன ஓட்டிகளுக்கு அடித்த லக்”…!!
அதில், ‘புற்று நோயாளி, மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து அங்கேயே தூங்கினால், புற்று நோயைக் கூட குணப்படுத்தலாம்’. ‘மாட்டு சாணத்தை எரித்தால் கொசு தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்’. ‘எனவே, ஒரு பசு உற்பத்தி செய்யும் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
























