கல்லூரி மாணவர்கள் – தேர்வுகள் ஒத்திவைப்பு.. பல்கலைக்கழகம் அறிவிப்பு!

0
கல்லூரி மாணவர்கள் - தேர்வுகள் ஒத்திவைப்பு.. பல்கலைக்கழகம் அறிவிப்பு!
கல்லூரி மாணவர்கள் - தேர்வுகள் ஒத்திவைப்பு.. பல்கலைக்கழகம் அறிவிப்பு!
கல்லூரி மாணவர்கள் – தேர்வுகள் ஒத்திவைப்பு.. பல்கலைக்கழகம் அறிவிப்பு!

தமிழகத்தில் புயல் காரணமாக தற்போது பெய்து வரும் கனமழையால் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைப்பு:

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் தற்போது தமிழகத்தை வாட்டி வதைத்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாது பெய்த கனமழையால் மக்கள் அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு குட்பை சொல்லும் மிக்ஜாம் – நாளை கரையை கடக்கும்!

இத்தகைய சூழலில் மாணவர்களின் நலன் கருதி திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் நாளை (டிச.05) நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!