
அரசு ஊழியர்களுக்கு வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!! அதிரடியாக DA வை உயர்த்தி அறிவித்த மத்திய அரசு…!! எவ்வளவு தெரியுமா..??
மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அன்றாட செலவுகளை நிர்வகிக்க அகவிலைப்படி தொகையானது அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதனை சுருக்கமாக DA (Dearness Allowance) என்பார்கள். மேலும், நாட்டில் நிலவும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக அடிப்படை அகவிலைப்படி மாற்றிமைக்க கூறி ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, டெல்லியில் இன்று (28-03-2025) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் “ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 % வரை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி என்பது 53 % இருந்து 55 % ஆக அதிகரித்துள்ளது”. இந்த “2 % அகவிலைப்படி உயர்வு என்பது வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும், அத்துடன் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத அகவிலைப்படி நிலுவை தொகையும் வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உயர்வின் மூலம் “மத்திய அரசு ஊழியர் ஒருவரின் அடிப்படை சம்பளம் ரூ.18 ஆயிரம் இருக்கும் பட்சத்தில் அவருக்கு மாதம் ரூ.360 அகவிலைப்படியாக கிடைக்கும். இதுவே ஒரு ஆண்டிற்கு ரூ.4,320 வரை கூடுதல் தொகையாக கிடைக்கும். மறுபுறம் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை பென்சன் ரூ.9 ஆயிரமாக இருந்தால் அவர்களுக்கு மாதத்திற்கு ரூ.180, ஆண்டிற்கு ரூ.2,160 வரை கூடுதல் தொகையாக கிடைக்கும்” என கூறப்படுகிறது.























