ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்பவரா நீங்கள்? கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க!
இந்தியாவில் பொது போக்குவரத்தில் சாதாரண மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது ரயில் போக்குவரத்து ஆகும். இதில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொள்கிறார்கள். பயணிகள் சிலர் தவிர்க்க முடியாத காரணத்தால் பயணம் செய்ய தவறிவிடுகிறார்கள். அதை வீணடிக்காமல் வேற்று பயணிக்கு மாற்றிவிடும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது அவரது குடும்பத்திரனார்க்கு மட்டுமே மாற்றிவிட முடியும்.
இந்த சேவையை பெற ரயில் புறப்படும் நேரத்திற்கு 24 மணி நேரத்துக்கு முன், கோரிக்கையை முன் வைக்க வேண்டும். ஐஆர்சிடிசி போர்ட்டலில் கோரிக்கை வைக்கப்பட்ட பிறகு, டிக்கெட் புதிய பயணிக்கு மாற்றப்படும். டிக்கெட்டின் பிரிண்ட் அவுட் எடுத்து அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு சென்று முன்பதிவு கவுண்டருக்கு சென்று நீங்கள் டிக்கெட்டை மாற்ற விரும்பும் நபரின் ஆதார் அட்டை, பான் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாளச் சான்றுகளை காண்பிக்க வேண்டும். அதன்பின் பயணச்சீட்டு உங்களுக்குப் பதிலாக பயணிக்கும் நபருக்கு எளிதாக மாற்றப்படும்.























