மருத்துவ துறை ஊழியர்களுக்கு இனி ‘இது ‘ கட்டாயம் – அரசின் அதிரடி உத்தரவு!
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் இனி கட்டாயம் சீருடைகளை அணிய வேண்டும் என்று சுகாதாரப் பணிகள் இயக்குனர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சீருடை கட்டாயம்:
திரிபுரா மாநிலத்தில் மருத்துவ அதிகாரிகள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவர்கள், பணி நேரத்தில் சீருடை அணிவதில்லை என்று சுகாதார சேவைகள் இயக்குனர் சுப்ரியா மல்லிக் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார். இதனால் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், லேப் டெக்னீசியன்கள் மற்றும் இதர பணியாளர்கள் அனைவரும் சீருடை அணிய வேண்டும் என்று கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவ நிபுணர்களுக்கும் சீருடை பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு சிலர் மட்டுமே பின்பற்றப்படுவதில்லை.
தமிழகத்தில் நவ. 25 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் !
எனவே முறையான சீருடைகளை பின்பற்றுவதற்கு வலியுறுத்தப்படுவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் அனைவரும் தங்களின் அடையாள அட்டைகளை கட்டாயம் அணிய வேண்டும் என்றும், ஒரு மாதத்தில் அரசு மருத்துவமனைகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரிகள் இந்த வழிகாட்டுதலை செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை பின்பற்றாத பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.