அரசு பள்ளிகளில் 154 காலிப்பணியிடங்கள்.. ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு வாய்ப்பு – முழு விவரம் உள்ளே!
புதுச்சேரி கல்வித்துறை சார்பில், அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்ப இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
வெளியான அறிவிப்பு
புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த காலியிடங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரிய தர்ஷினி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, புதுவை பள்ளி கல்வித்துறை 2023-24 ஆம் கல்வியாண்டில் வகுப்புகளை நடத்த மண்டல நேரடி ஆட்சேர்ப்பு மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும். தற்போதைக்கு அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் இருந்து ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் சேவை தேவைப்படுகிறது.
தமிழகத்தில் நவ. 25 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் !
அந்த வகையில் இந்த பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் 1.7.2023 தேதியின் படி 65 வயதை கடந்திருக்கக் கூடாது. அதனால் சமீபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு மாதம் ரூ.22 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிப்பவர்கள் அந்தந்த பிராந்தியத்தில் உள்ள பள்ளிகளில் பணியமார்த்தப்படுவார்கள் ஆர்வமுள்ளவர்கள் மண்டல வாரியாக நடைபெறும் கலந்தாய்வு தேர்வில் கலந்து கொள்ளலாம். அதற்கான தேதி மண்டல அலுவலகங்கள் மூலமாக தெரிவிக்கப்படும். இந்த தேர்வில் கலந்து கொள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அசல் சான்றிதழ்களுடன், ஓய்வூதிய ஆணை, வயது மற்றும் தகுதிச் சான்றிதழ்களின் சான்றொப்பமிட பட்ட நகல்களை கொண்டு வர வேண்டும்.