மக்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு..!! ஆதார் அட்டையை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!!
ஆதார் அட்டை என்பது இந்தியாவில் வசிக்கும் அனைத்து நபர்களுக்கும் ஒரு முக்கிய அடையாள ஆவணமாக இருந்து வருகிறது. அத்தகைய ஆவணத்தை 10 வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்திருந்த நிலையில் ஆன்லைனில் இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம் என்ற திட்டத்தை அரசு கொண்டு வந்திருந்தது. மேலும், அத்தகைய ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க செப்டம்பர் 14 ம் தேதி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான கால அவகாசம் டிசம்பர் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக UIDAI தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


























