10 நாட்களில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு …!! மூத்த அமைச்சர் அறிவிப்பு…!! விவரம் உள்ளே!!
தமிழகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருவதை நாம் அறிவோம். இந்நிலையில் இவர் விரைவில் துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று கோட்டை வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தற்போது இது தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
கடைகளில் அரசு சத்துணவு முட்டைகள்.. உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை.. முழு விவரம் உள்ளே!!
அதாவது அடுத்த 10 நாள்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்பார் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இன்னும் ஓரிரு நாள்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, நேற்று (செப்டம்பர் 18) உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் எனக் கூறப்பட்டது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனையும் நடந்தது. ஆனாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
























