கடைகளில் அரசு சத்துணவு முட்டைகள்.. உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை.. முழு விவரம் உள்ளே!!
துறையூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் பிரபல தனியார் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், அந்த உணவகத்தில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் தடையின்றி மிகக் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களிடம் பல்வேறு விதமான முட்டை உணவுகளாக விற்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி.. தமிழக எல்லைகளில் தீவிர சோதனை.. விவரம் உள்ளே!!
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சத்துணவு முட்டையை கொள்முதல் செய்த தனியார் உணவகத்திற்கு சீல் வைத்தனர். மேலும், அங்கிருந்து 115 முட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
























