தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பு.. டெல்லி கணேஷ் மறைவுக்கு த.வெ.க தலைவர் விஜய் இரங்கல்!!

0
தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பு.. டெல்லி கணேஷ் மறைவுக்கு த.வெ.க தலைவர் விஜய் இரங்கல்!!

நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (நவம்பர் 10) காலமானார். சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது X தள பக்கத்தில் பதிவிட்ட அவர், “மூத்த நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவால் காலமான செய்தி வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக 400க்கும் அதிகமான படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும்” எனப் பதிவிட்டுள்ளார்.

JOIN WHATSAPP EXAMSDAILY TAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!