AUS vs PAK 2024: 22 ஆண்டுகளுக்கு பின் சாதனை படைத்த பாகிஸ்தான்.. என்ன Record வாங்க பாக்கலாம்!!
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ஆடவர் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. இதில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வென்று இருந்த நிலையில் தொடர் சமனில் இருந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான் அணி சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது 22 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் அணி முதல் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


























