IND vs AUS 2024.. கேப்டனாக பாட் கம்மின்ஸ்.. ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!!
இந்திய ஆடவர் அணியானது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்த இரு அணிகள் எப்போதும் மோதினாலுமே ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு உண்டாகும். அதே போன்ற எதிர்பார்ப்பு தான் இந்த தொடருக்கும் எழுந்துள்ளது.
இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆஸ்திரேலியா அணியை CA நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில் கேப்டனாக பாட் கம்மின்ஸ் செயல்பட உள்ளார். இந்த இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 22ஆம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலியா அணியை கீழே பார்க்கலாம்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலியா அணி:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியான், மிட்ச் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்டார்க் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்.
























