சீனா மீதான வரி குறைக்கப்படும்.. அதுக்கு இத செய்யணும்… டிரம்ப் முன்வைத்த ஆஃபர்..
சீன நிறுவனத்தின் செயலியான “டிக் டாக்” மூலம், அமெரிக்கர்களை சீனா உளவு பார்ப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவில் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை விதித்தார். இதை தொடர்ந்து, அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், ஜோ பைடன் விதித்த டிக்டாக் செயலிக்கான தடை உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். இதனால் “டிக் டாக் செயலிக்கான தடை 75 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது”. இந்நிலையில் டிக்டாக் செயலி குறித்து மற்றொரு தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
தமிழகத்தை பின்பற்றும் தெலுங்கானா..!! தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதாக தகவல்…!
அதாவது, “சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் டிக்டாக் செயலியை அமெரிக்காவிற்கு விற்றால் சீன பொருட்கள் மீதான வரி விதிப்பைக் குறைக்க தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், வருகின்ற ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் டிக்டாக் செயலியை விற்கவில்லை என்றால் தேசியப் பாதுகாப்பு காரணமாக 170 மில்லியன் அமெரிக்கர்கள் பயன்படுத்தும் டிக்டாக் தளம் அமெரிக்காவில் முற்றிலுமாக தடை செய்யப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்”.
























