1 முதல் 8 வகுப்பு இறுதி தேர்வுகளுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு…!! பள்ளிக் கல்வித்துறையின் அதிரடி சுற்றறிக்கை

0
1 ????? 8 ??????? ????? ?????????????? ??????? ????????? ????????...!! ??????? ??????????????? ?????? ???????????
1 முதல் 8 வகுப்பு இறுதி தேர்வுகளுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு...!! பள்ளிக் கல்வித்துறையின் அதிரடி சுற்றறிக்கை

1 முதல் 8 வகுப்பு இறுதி தேர்வுகளுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு…!! பள்ளிக் கல்வித்துறையின் அதிரடி சுற்றறிக்கை

தமிழ்நாட்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இறுதி ஆண்டு தேர்வுகள் வருகின்ற ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதி ஆண்டு தேர்வின் போது, வினாத்தாள்கள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது .இதனால், முன்கூட்டியே அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனா மீதான வரி குறைக்கப்படும்.. அதுக்கு இத செய்யணும்…  டிரம்ப் முன்வைத்த ஆஃபர்..

அதாவது, “பள்ளிகளில் இந்த இறுதி ஆண்டு தேர்வுக்கான வினாத்தாள்களை, கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் (EMIS) தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, நகல்களை எடுக்கும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது. மேலும், “வினாத்தாள்கள் தேர்விற்கு முன்னதாகவே கசிந்துவிடாதபடி, கவனமாக செயல்பட வேண்டும்” என்றும் அறிவித்துள்ளது. மேலும், “இந்த இறுதி ஆண்டு வினாத்தாள்கள் கசிந்தால், சம்மந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர், பிற ஆசிரியர்கள், அந்த ஒன்றியத்தின் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!