இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்த உதவத் தயார்..!! ட்ரம்ப் அறிவிப்பு..!!
காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்றிரவு “ஆபரேஷன் சிந்தூர்” என்ற நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் உள்ள 9 இடங்களை தரைமட்டமாக்கியது. இதனை “போராக கருதுவோம்” என பாகிஸ்தானிய பிரதமர் கூறியுள்ள நிலையில், சர்வதேச அளவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஒருவர் எத்தனை லோன்களுக்கு விண்ணப்பிக்கலாம்..?? அதற்கு என்னென்ன விஷயங்கள் தேவை.. நிபுணர்கள் வெளியிட்ட தகவல்..!!
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்த உதவத் தயார்” என்று அறிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளுடன் நல்ல நட்புடன் இருப்பதாக விளக்கம் அளித்துள்ளார். மேலும், பல உலக நாடுகளும் இந்தியா – பாகிஸ்தான் இடையே நிகழும் போர் பதற்றத்தை தவிர்க்க இருநாடுகளுக்கும் வேண்டுக்கோள் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


























