ஒருவர் எத்தனை லோன்களுக்கு விண்ணப்பிக்கலாம்..?? அதற்கு என்னென்ன விஷயங்கள் தேவை.. நிபுணர்கள் வெளியிட்ட தகவல்..!!

0
?????? ?????? ??????????? ????????????????..?? ?????? ???????? ????????? ????.. ?????????? ????????? ?????..!!
ஒருவர் எத்தனை லோன்களுக்கு விண்ணப்பிக்கலாம்..?? அதற்கு என்னென்ன விஷயங்கள் தேவை.. நிபுணர்கள் வெளியிட்ட தகவல்..!!

ஒருவர் எத்தனை லோன்களுக்கு விண்ணப்பிக்கலாம்..?? அதற்கு என்னென்ன விஷயங்கள் தேவை.. நிபுணர்கள் வெளியிட்ட தகவல்..!!

எதிர்பாராத அல்லது பெரிய அளவிலான பொருளாதார செலவுகளான வீட்டு பராமரிப்பு, திருமணம், கல்வி அல்லது உடனடி செலவுகள் போன்றவற்றை சமாளிப்பதற்கு பர்சனல் லோன் சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. மேலும், கடன் பெற அடமானம் எதுவும் தேவையில்லை என்பதால் பலரும் இதை தேர்வு செய்கின்றனர். இந்நிலையில் ஒருவர் ஒரே சமயத்தில் எத்தனை பர்சனல் லோன்கள் வாங்கலாம் என்ற கேள்வி பலரிடம் உண்டு.

JIPMER ஆணையத்தில் Project Technical Support-III வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

அந்த வகையில் ஒரு தனிநபர் எத்தனை பர்சனல் லோன்களை வாங்க வேண்டும் என்பதற்கு RBI எந்த ஒரு கட்டுப்பாட்டையும் இதுவரை விதிக்கவில்லை. இருப்பினும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இதற்கு உரிய பாலிசிகளை கொண்டுள்ளன. அதன்படி கடனை திருப்பி செலுத்தும் திறன் அடிப்படையில் மட்டுமே ஒருவருக்கான கூடுதல் கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த கூடுதல் கடன் பெற தனிநபர் கிரெடிட் ஸ்கோர், ப்ராசசிங் கட்டணங்கள், கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் போன்ற அத்தியாவசிய விஷயங்களை கருத்தில் கொள்வது அவசியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே நீங்கள் கடன் வாங்கி இருக்கும் பட்சத்தில் கூடுதலாக லோன் வாங்குவதை முடிந்த அளவு தவிர்க்க முயற்சி செய்யுங்கள் எனவும், மல்டிபிள் பர்சனல் லோன்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், இதற்கு மிக தீவிரமான பொருளாதார திட்டமிடல் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!