சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வழக்கம் போல் ரயில் இயங்க அனுமதி..!! வெளியான முழு தகவல்..!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், நேற்று சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் முக்கிய ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியது.
வாகனங்களை மேம்பாலங்களில் பார்க் செய்துள்ளீர்களா?? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்!!
இதனால், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட இருந்த சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், சில ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, ஆந்திராவை நோக்கி நகர்வதால், படிப்படியாக மழையின் அளவு குறைந்து வருகிறது. இதனால் பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி ரயில் பாலத்தை சூழ்ந்திருந்த மழை நீர் வடிந்துள்ளதால் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.


























