தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பை இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்றும் நாளையும் (செப்டம்பர் 21, 22) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
மாதம் ரூ.1500 முதலீடு… ஆனால், கிடைப்பதோ ரூ.5 லட்சம்..!! அட, இந்த திட்டம் சூப்பரா இருக்கே”..!!
சென்னையை பொறுத்த வரையில், வானம் ஓரளவுக்கு மேகமுட்டத்துடனே இருக்குமே தவிர அதிக பட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதேபோல் இன்று (செப்டம்பர் 21) முதல் செப்டம்பர் 25 ஆம் தேதி வரை மன்னர் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதியில் மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .


























