SSC CGL Notification 2026 ஆன்லைன் விண்ணப்பம் இன்றோடு முடிகிறது! 12,256 காலிப்பணியிடங்கள்!

0

இறுதி எச்சரிக்கை:
SSC CGL 2026 ஆன்லைன் விண்ணப்ப விண்டோ இன்றோடு முடிகிறது!
உடனே விண்ணப்பியுங்கள்!

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள உயரிய குரூப் ‘B’ மற்றும் ‘C’ பதவிகளில் அமர ஆவலோடு காத்துக்கொண்டிருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. மொத்தம் 12,256 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்படும் SSC CGL 2026 தேர்விற்கு விண்ணப்பிக்க இன்று (ஜூன் 25, 2026) இரவு 11:00 மணி வரை மட்டுமே இறுதி அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே காலக்கெடு முடிந்திருந்தாலும், விண்ணப்பிக்க முடியாத மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தற்பொழுது 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இறுதி வாய்ப்பை தவறவிடாமல் உடனே எப்படி விண்ணப்பிப்பது என்ற முழு விவரங்களை இந்த பிளாக்கில் பார்ப்போம்! 

SSC CGL 2026: 

முக்கியத் தகவல்கள் (Highlights)  விவரங்கள் (Details)
தேர்வை நடத்தும் அமைப்பு பணியாளர் தேர்வாணையம்
(Staff Selection Commission – SSC)
மொத்த காலிப்பணியிடங்கள் 12,256 இடங்கள்
விண்ணப்பிக்க இறுதி நாள் ஜூன் 25, 2026
(இன்று இரவு 11:00 மணி வரை)
கட்டணம் செலுத்த கடைசி நாள் ஜூன் 26, 2026
விண்ணப்பத் திருத்த காலம் ஜூலை 01 முதல் ஜூலை 03, 2026 வரை
Tier-1 தேர்வு நடைபெறும் காலம் ஆகஸ்ட் – செப்டம்பர் 2026
அதிகாரப்பூர்வ இணையதளம் www.ssc.gov.in

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு (Eligibility Criteria)

1.ல்வித் தகுதி (Educational Qualification):

  • விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் (Any Bachelor’s Degree) பெற்றிருக்க வேண்டும்.
  • இறுதி ஆண்டு தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

2. வயது வரம்பு (Age Limit):

  • பதவிகளைப் பொறுத்து குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மத்திய அரசு விதிகளின்படி OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு முறை (Exam Pattern 2026)

SSC CGL Selection Process இரண்டு கட்ட கணினி வழித் தேர்வுகளைக் கொண்டது (Computer Based Test): 
  1. Tier-1 (ஆகஸ்ட் – செப்டம்பர் 2026):
    இது ஒரு தகுதித் தேர்வு (Screening Test) மட்டுமே. இதில் பொது அறிவு, கணக்கு, ரீசனிங் மற்றும் ஆங்கிலப் பிரிவுகளில் இருந்து 100 கேள்விகள் (200 மதிப்பெண்கள்) கேட்கப்படும்.
  2. Tier-2 (டிசம்பர் 2026):
    இறுதி மெரிட் லிஸ்ட் இந்தத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்படும்.
     

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
(Step-by-Step Guide)

  1. மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் புதிய அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.gov.inபக்கத்திற்குச் செல்லவும்.
  2. உங்களிடம் ‘One Time Registration’ (OTR) எண் இல்லை என்றால், முதலில் அடிப்படை விவரங்களை அளித்துப் பதிவு செய்யவும்.
  3. லாகின் செய்த பிறகு, டாஷ்போர்டில் உள்ள “Combined Graduate Level Examination 2026” என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
  4. உங்களது புகைப்படம், கையெழுத்து மற்றும் கல்வி விவரங்களைச் சரியாகப் பதிவேற்றி, விண்ணப்பக் கட்டணமான ₹100 செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும் (பெண்கள், SC/ST பிரிவினருக்கு கட்டணம் கிடையாது).
மத்திய அரசின் வருமான வரி ஆய்வாளர் (Income Tax Inspector), உதவிப் பிரிவு அதிகாரி (ASO) போன்ற பவர்ஃபுல் பதவிகளைப் பெற இதுவே உங்களுக்கான கடைசி வாய்ப்பு. சர்வர் முடங்குவதற்குள் இன்றே உங்களது விண்ணப்பத்தை விரைந்து பதிவு செய்யுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!