ஜன் தன் திட்டத்தில் 59.09 கோடி வங்கிக் கணக்குகள்: மத்திய அரசு தகவல்

0

ஜன் தன் திட்டத்தில் 59.09 கோடி வங்கிக் கணக்குகள்: மத்திய அரசு தகவல்

பிரதமரின் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 59.09 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் சுமார் 56% கணக்குகள் பெண்களின் பெயரில் உள்ளன.

மேலும், 2026 ஆகஸ்ட் 19 நிலவரப்படி இந்தக் கணக்குகளில் மொத்தம் ரூ.3.17 லட்சம் கோடி வைப்புத்தொகை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 78% கணக்குகள் கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம் வங்கிச் சேவைகளை அனைவருக்கும் கொண்டு செல்வதோடு, சேமிப்பு, காப்பீடு, கடனுதவி மற்றும் அரசு நலத்திட்டங்களின் நேரடி நிதி பரிமாற்றம் போன்ற வசதிகளை விரிவுபடுத்த உதவியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!