நாளை ரயில் சேவை ரத்து…!! எந்த எந்த இடங்களுக்கு தெரியுமா..? முழு விவரம் உள்ளே
தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்களில் ரயில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை சென்னையின் பல்வேறு பகுதிகளில் ரயில் பராமரிப்பு பணிகள் தொடங்க உள்ளதால் சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்படும் புறநகர் ரயில் சேவையானது நாளை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வேதுறை தெரிவித்துள்ளது. மேலும், மாற்றாக சென்னை கடற்கரை மற்றும் பல்லாவரம் இடையே ரயில்கள் இயக்க புதிய அட்டவணை ஒன்றை வெளியிட்டுள்ளது .


























