மாதம் ரூ.1500 முதலீடு… ஆனால், கிடைப்பதோ ரூ.5 லட்சம்..!! அட, இந்த திட்டம் சூப்பரா இருக்கே”..!!
POST OFFICE ஆனது சாமானிய மக்களும் சேமிப்பு தொடங்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், PPF எனப்படும் பொது வருங்கால நிதி என்ற முதலீட்டு திட்டமானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இதன் முழு விவரங்களை கீழுள்ள பத்தியில் விரிவாக காண்போம்.
அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..|| “மீண்டும் அகவிலைப்படி உயர்கிறது…ஆவலுடன் மக்கள்”..!!
PPF திட்டமானது முதலீட்டாளர்களுக்கு 7.1% வட்டி வழங்குகிறது. இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். மேலும், இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக மாதம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1500 வரை முதலீடு செய்யும்பட்சத்தில், 15 ஆண்டுகள் கழித்து லாபமாக ரூ.5 லட்சம் நாம் பெறலாம். உதாரணமாக, இப்போது நீங்கள் மாதம் ரூ.1500 முதலீடு செய்கிறீர்கள் என்றால், அதில் உங்களுக்கு 15 ஆண்டு வட்டி தொகை மட்டுமே ரூ.2,18,185 கிடைக்கும். எனவே, 15 ஆண்டு முதிர்வு காலத்திற்கு பிறகு உங்கள் தொகையானது வட்டியோடு சேர்த்து ரூ.4,88,185 நமக்கு கிடைக்கும். அத்துடன், இந்த திட்டத்தை மேலும் 5 ஆண்டு காலம் நீட்டித்துக் கொள்ளலாம். இவ்வாறு நீட்டிக்கும் பட்சத்தில் முதிர்வு தொகையானது நினைத்ததை விட அதிகமாக நமக்கு கிடைக்கும்.


























